ஏழின் மகிமை !



ஏழின் மகிமை !

ஏழின் மகிமை !









இந்த அற்புதமான பிரபஞ்சத்தில்  நம்மை  அதிசயிக்க வைக்கும் விஷயங்கள் பல உள்ளன !  
 ஆனால் நமது வேகமான வாழ்க்கையில் அவற்றை நாம் கண்டு கொள்வதில்லை 
அப்படி சில விஷயங்களை இங்கே  பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு சில சிறப்புத் தன்மைகள் இருக்கும் . அப்படி பார்க்கும்போது  
என்னைக் கவர்ந்த எண் 7 !

இதைப் பற்றி கொஞ்சம் அலசுவோம் !

நம் எல்லோருக்கும் தெரிந்த சில 

வண்ணங்கள் 7 
வானவில்லில் நிறங்கள்  7
சுவை 7 -  அறுசுவையோடு  நீர் சுவை 
வாரத்தில் 7 நாட்கள் 
உடலில் உள்ள 7 சக்ரம்
( மூலாதார, ஸ்வாதிஷ்டான, மணிப்பூரஹ, அனாஹத, விசுத்த, ஆக்ஞா , சஹஸ்ரஹார)
புனிதமான நதிகள் 7
ஸ்வரங்கள்  7
தொடு உணர்ச்சிகள் 7 .


இந்து மதத்தில் 7 மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது 

சூரியதேவன் தேரில் குதிரைகள் 

சப்தகன்னிகைகள் 

சப்த ரிஷி 

7 லோகங்கள் 

7 நரகங்கள் 

7 கடல்கள் 

7 மலை 

உணர்வு நிலையில் 7 அடுக்கு



1.உறங்கும் நிலை 
2.விழிப்பு நிலை 
3.கனவு நிலை 
4.எப்பொழுதும் விழித்துக்கொண்டு இருக்கும் ஆழ்  நிலை 
5.பிரபஞ்சத்தில்  நடக்கும் அனைத்தையும் புரிந்து கொள்ளும் நிலை 
6.இறைவனை உணரும் நிலை 
7.தானும் இறைவனும் ஒன்றே என அறியும் நிலை 



ஆன்மிகத்தை அடைவதற்காக நாம் கடக்க வேண்டிய  7 அடுக்கு நிலை 


புலன்களைச் சார்ந்த முதல் அடுக்கு 
சூழ்ந்திருக்கும் எல்லாவற்றையும் அறியத்துடிக்கும் ஆர்வம் சார்ந்த இரண்டாம் அடுக்கு 
காமத்தை துய்க்கத் துடிக்கும் மூன்றாம் அடுக்கு 
குடும்பச் சுமையை தாங்கி, பணம் புகழ் ஈட்டும நான்காம் அடுக்கு 
பொது தொண்டு செய்யவேண்டிய கட்டமான ஐந்தாம் அடுக்கு 
கலைகளில் சிறந்து தெய்வாம்சத்தை உணரும் அடுக்கு 
இறையன்பால் நமக்கு உண்டாகும் அற்புதங்களுடன்  ஆன்ம மலர்ச்சி 

  
இதில் நாம் எங்கே இருக்கிறோம் ! ?

lally

No comments:

Post a Comment