அலைகள் ALAIGAL
ஓடி ஓடி நீ வந்தாய் எதைத் தேடி
வந்த வேகத்திலே திரும்பினாய்
உள் கடலைக் கூடி
ஆழ் கடலின் அமைதியும் கரை கடலின் கொந்தளிப்பும் !
நுரைக்கின்றாய் நாள் முழுதும் எதை உணர்த்த?
வெளி உலகில் நித வாழ்வில் களிப்பாய் நீ துடிப்பாய்
ஆனால்
ஆழ் மனதில் இறை உணர்வில் அமைதியாய்
எந்நாளும் ஓ மனமே நீ இருப்பாய்
என்றுணர்த்தும் தத்துவமோ சொல் அலையே
-- லல்லி